மின்சார கேபிள் அமைக்கும் பணிக்காக கிண்டி ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: மின்சார கேபிள் அமைக்கும் பணிகள் காரணமாக கிண்டி ஜிஎஸ்டி சாலையில் வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மவுண்ட் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜிஎஸ்டி சாலை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே உள்செல்லும் சாலையில் பின்னர் வெளிசெல்லும் சாலையிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக 400 கிலோ வாட் கேபிள் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் வாகன போக்குவரத்து மாற்று பாதையில் செல்ல வரும் 20 மற்றும் 21ம் ஆகிய இரண்டு நாட்களுக்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பின்வருமாறு மாற்றம் செய்யப்படுகிறது.

* ஜிஎஸ்டி சாலை விமான நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் கத்திபாரா பாலத்தில் மேலே நேராக சென்று (கிண்டி போகும் வழி செல்லாமல்) சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திருப்பி திருவிக தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம்.

* பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்று ஏதும் இன்றி வழக்கமாக சாலையில் (கத்திபாரா வழியாக) செல்லலாம்.

* வடபழனியிலிருந்து வரும் வாகனங்கள் சிப்பெட் சந்திப்பில் இடதுபுறம் திருப்பி திருவிக தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணாசாலையை சென்றடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: