3 பேருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த எருமையூர் பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருபவர் ஏழுமலை (40). இவரது கடைக்கு நேற்று காலை 2 பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் ஏழுமலையிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஏழுமலை பணம் அளிக்க மறுக்கவே கஞ்சா போதையில் இருந்த கும்பல் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் ஏழுமலையை வெட்டியுள்ளனர். ஏழுமலையின் கூச்சல் சத்தம் கேட்டு அவரது தம்பி அயன், அவரது மனைவி ஆகிய இருவரும் தடுக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது, மூன்று பேரையும் ஓட ஓட சரமாரியாக பட்டா கத்தியால் வெட்டிவிட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது. தகவல் அறிந்து வந்த சோமங்கலம் போலீசார் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சோமங்கலம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் கஞ்சா போதையில் சுற்றி தெரியும் இளைஞர்களால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: