1-4 வயது குழந்தைகளுக்கு டிக்கெட் தேைவயில்லை: ரயில்வே விளக்கம்

ரயிலில் 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று டிக்கெட் விதிமுறைகளை ரயில்வே மாற்றி அமைத்துள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இவை முற்றிலும் தவறானவை, ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை, பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கையை பெற்றுக் கொள்ளலாம், தேவையில்லை எனில், அந்த குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: