இமாச்சலத்தில் 2 காங். எம்எல்ஏ பாஜ.வுக்கு தாவல்

புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், இம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ.க்களான பவன் காஜல், லக்விந்தர் ரானா ஆகியோர் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் முன்னிலையில் நேற்று பாஜ.வில் சேர்ந்தனர். ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு  சட்டமன்ற தேர்தலிலும் மாநிலத்தில் ஆட்சி மாற்றம்  நடைபெறும். ஆனால், வரும் தேர்தலில் இந்த நடைமுறை மாறி பாஜ.வே மீண்டும் ஆட்சி அமைக்கும்,’’ என்றார்.

அதேபோல், விரைவில் தேர்தல் நடக்க உள்ள குஜராத் மாநிலத்திலும் காங்கிரசை சேர்ந்த 2 தலைவர்கள் கட்சியில் இருந்து விலகினர்.  முன்னாள் அமைச்சர் நரேஷ் ராவல், முன்னாள் எம்பி ராஜூ பர்மார் ஆகியோர்  மாநில பாஜ தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

Related Stories: