கவுதம் அதானிக்கு இசட் பாதுகாப்பு

புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர் கவுதம் அதானி. இவருக்கு பல்வேறு தரப்புக்களில் இருந்து அச்சுறுத்தல்கள் இருப்பதால் இசட் பிரிவு பாதுகாப்பு தேவை என புலனாய்வு துறை அறிக்கை சமர்பித்து இருந்தது. இதனை தொடர்ந்து, கவுதம்  அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதன்படி, கவுதம் அதானிக்கு பாதுகாப்பு வழங்கும்படி மத்திய ரிசர்வ் போலீஸ் படையை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் கவுதம் அதானிக்கு பாதுகாப்பு வழங்கப்படும். இதற்காக, மாதம் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகும். இந்த தொகையை அதானி குழுமமே ஏற்கும். முன்னதாக, கடந்த 2013ம் ஆண்டு ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவருடைய  மனைவிக்கும் குறைந்த அளவில் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

Related Stories: