சுதந்திர தின கொண்டாட்ட உற்சாகம் பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் விருந்து: ராஜஸ்தானில் அதிர்ச்சி

பார்மர்: ராஜஸ்தானில் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கு பின், இதில் பங்கேற்ற மாணவர்கள் உள்ளிட்டோருக்கு கஞ்சா, அபின் போன்ற கும்பல் போதை பொருள் விருந்து அளிக்கப்பட்ட வீடியோ வைரலாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் உள்ள குடமலானி பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இதில், நேற்று முன்தினம் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிந்த பிறகு, பள்ளியின் ஒரு பகுதியில் கும்பல் ஒன்று போதை பொருட்களை உட்கொள்ளும் 4 வீடியோக்கள் வரிசையாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவில் ஒருவர் போதை பொருளை மற்றவர்களுக்கு கொடுக்க, அவர்கள் அதனை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இதில், மாணவர்களும் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பள்ளியில் போதை பொருளை உட்கொண்டவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories: