அமைச்சருக்கு கைது வாரன்ட் நிதிஷ் மழுப்பல்

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை  நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், சட்ட அமைச்சராக ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த கார்த்திகேய சிங் பொறுப்பேற்றார்.  கடந்த 2014ம் ஆண்டு கட்டிட உரிமையாளரை கடத்திய சம்பவத்தில் கார்த்திகேய சிங் மற்றும் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் (நேற்று முன்தினம்) அவர் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய நாளன்று அவர் அமைச்சராக பதவியேற்று உள்ளார். எனவே, அவரை உடனே அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி பாஜ எம்பி சுஷில் குமார் மோடி கோரி உள்ளார். ஆனால், கார்த்திகேய சிங் மீது உள்ள வழக்குகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று நிதிஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: