பஞ்சாபில் விமான அருங்காட்சியகம்

சண்டிகர்: பாட்டியாலா விமான நிலையத்தில் விமான அருங்காட்சியகம் அமைக்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் ஒப்புதல் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா விமான நிலையம் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் 20ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. விமானப் போக்குவரத்துத் துறையில் நூற்றாண்டு பழமையான வரலாற்றுடன் செயல்படும் பாட்டியாலா விமான நிலையத்தை பற்றி வரும் தலைமுறையினர் அரியவும், அறிவு மற்றும் கல்விக்காக வெளிப்படுத்தவும் விமான அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, பஞ்சாப் மாநில சிவில் ஏவியேஷன் கவுன்சில் வழங்க திட்ட  முன்வடிவுக்கு முதல்வர் பகவந்த் மான் ஒப்புதல் அளித்து உள்ளார்.

இது குறித்து முதல்வர் பகவந்த் மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாட்டியாலா விமான நிலையத்தில் விமான அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதில், மாநிலத்தில் விமானப் போக்குவரத்துத் துறையின் வரலாறு மற்றும் கலைப்பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும். இந்த அருங்காட்சியகத்தில் விமானங்களின் பிரதிகள் மட்டுமின்றி, புகைப்படங்கள், வரைபடங்கள், மாதிரிகள், வரைபடங்கள், ஆடைகள் மற்றும் விமானிகள் பயன்படுத்திய உபகரணங்களையும் காட்சிப்படுத்தலாம். வரவிருக்கும் அருங்காட்சியகத்தில் பருவ இதழ்கள், தொழில்நுட்ப கையேடுகள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும்,’ என்று கூறி உள்ளார். 

Related Stories: