கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம் மேக் இந்தியா நம்பர் - 1 கெஜ்ரிவால் புது திட்டம்: அனைத்து கட்சியும் சேர அழைப்பு

புதுடெல்லி: கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘மேக் இந்தியா நம்பர்-1’ என்ற திட்டத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கியுள்ளார். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. பஞ்சாபில் ஆட்சியை பிடித்ததைத் தொடர்ந்து, குஜராத்திலும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் தேர்தலுக்கான பணிகளை அவர் முடுக்கி விட்டுள்ளார். பிரதமர் மோடியின் இலவசம் குறித்த கருத்துக்கு, ‘கல்வி, சுகாதாரத்தை மாநில அரசுகள் குடிமக்களுக்கு இலவசமாக வழங்குவது இலவசங்களின் கீழ் வராது,’ என்று கெஜ்ரிவால் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில், ‘மேக் இந்தியா நம்பர்-1’ திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கெஜ்ரிவால், ‘கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, பெண்களுக்கு சம உரிமை, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை, தொழில் வளர்ச்சி, இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உலகிலேயே இந்தியா நம்பர்- 1 நாடாக மாற வேண்டும். அந்த இலக்கை அடைவதற்காக ‘மேக் இந்தியா நம்பர்- 1’ என்ற திட்டம் தொடங்கபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தில் சேர வேண்டும். இதனை ஒன்றிணைக்கும் முயற்சியாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்,’ என்று கூறினார்.

Related Stories: