திருப்பதி மலைப்பாதை போக்குவரத்து நிறுத்தம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், திருமலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், கோயில் எதிரே தண்ணீர் தேங்கியது. மழையால் மலைப் பாதையில் மண் சரிவு ஏற்படும் என்பதால் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மேல், மலைப்பாதையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லக்கூடிய வாகனங்கள் ஜிஎன்சி சோதனைச் சாவடியில் இருந்து அணிவகுத்து நின்றன. அதிகாலை 3 மணிக்கு பிறகு அனைத்து வாகனங்களும் மீண்டும் திருப்பதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. இதேபோல், திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லவும் அதிகாலை 3 மணிக்கு பிறகு அனுமதிக்கப்பட்டது. திடீர் மழையால் நள்ளிரவில் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: