60 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெப்பத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் சீனா: தொழிற்சாலைகளை மூட உத்தரவு

பீஜிங்: சீனாவில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மின் பற்றாக்குறையை தவிர்க்க தொழிற்சாலைகளை 6 நாட்களுக்கு மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. தற்போது, இங்கு 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வாட்டி வதைத்து வருகிறது. கடுமையான வெப்ப அலைகள் வீசி வருவதால் பொதுமக்கள், அதனை தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் மின்விசிறி, குளிர்சாதனங்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதனால் மின்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. நீர்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் குறைந்துள்ளது. சீனாவின் மிகப் பெரிய மாகாணங்களில் ஒன்றான சிச்சுவானில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில், இங்குள்ள 21 நகரங்களில் 19 நகரங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை நிறுத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்படுவதால் குடியிருப்பு பகுதிகளுக்கு போதுமான மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: