முரசொலி மாறன் 89வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் 89வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலிமாறனின் 89வது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவர் பிறந்த வீடான நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலிமாறன் உருவச்சிலைக்கு நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் உள்ள முரசொலி மாறன் உருவப்படத்திற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டிகலைவாணன் தலைமையில் திமுகவினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* மதுரை: மதுரை அண்ணா நகரில் மாநகர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* புதுச்சேரி: புதுச்சேரி திமுக தலைமை அலுவலகத்தில், முரசொலி மாறன் படத்திற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான சிவா எம்எல்ஏ தலைமையில், திமுகவினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

* கோவை: கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முரசொலி மாறன் படத்திற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் தலைமையில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* பொள்ளாச்சி: கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில், பொள்ளாச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமையில், நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் முரசொலி மாறன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

* திருப்பூர்: திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், மேயர் தினேஷ்குமார், மாநகர திமுக பொறுப்பாளர் டி.கே.டி. நாகராசன் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

* ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் முரசொலி மாறன் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

* ஊட்டி: ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான பா.மு. முபாரக் தலைமையில் முரசொலி மாறன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

* ராணிப்பேட்டை: மாவட்ட திமுக அலுவலகம், முத்துக்கடை காந்தி சிலை அருகில் முரசொலி மாறன் படத்துக்கு அமைச்சர் ஆர்.காந்தி மரியாதை செலுத்தினார்.

* வேலூர்: வேலூர் மாநகர திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான கார்த்திகேயன், மாவட்ட அவைத் தலைவர் முகமதுசகி, மேயர் சுஜாதா உள்ளிட்டோர் முரசொலி மாறன் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

* திருவண்ணாமலை: மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறன் திருவுருவ படத்துக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உட்பட திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

* கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் முரசொலி மாறன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பென்னாகரத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இன்பசேகரன் தலைமையிலும் விழா கொண்டாடப்பட்டது.

* திராவிட அரசியலின் அறிவு பெட்டகம்

திராவிட அரசியலின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன் பிறந்தநாளில்  அவரை நினைவுகூர்ந்து, தமிழ்நாட்டை வளப்படுத்த உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் 89வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது: கலைஞரின் மனச்சாட்சியாய் விளங்கிய, திராவிட அரசியலின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து, தமிழ்நாட்டை வளப்படுத்த உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: