அரியவகை நோயால் அவதிப்பட்ட சிறுமிக்கு மருத்துவ உதவி: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: கடந்த 6 ஆண்டுகளாக மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிவுற்ற ஆவடி சிறுமியை நேரில் சந்தித்து மருத்துவ செலவை ஏற்பதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறினார். ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு 2012ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர் இவர்களின் மூத்த மகள் டானியா. ஒன்பது வயதாகிறது .டானியா வீராபுரம் அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு பயிற்று வருகிறார். இவருக்கு ஒரு பக்க கன்னம் முழுவதும் அரியவகை முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டது.

இதற்காக கடந்த 6 ஆண்டுகளாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் எந்தவித முன்னேற்றம் இல்லாத நிலையில் இதனால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் அவதிப்படுவது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதனை பார்த்து திருவள்ளூர் மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்தகால மருத்துவ தகவல்கள் குறித்து கேட்டு அறிந்தனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவை சந்திக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் நேரில் வருகை தந்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கலந்துரையாடினார்.

மேலும் சிறுமி குறித்தும் குடும்பச்சூழல் குறித்தும் பெற்றோர்களிடம் விசாரித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகவும் உயர்தர சிகிச்சை அளிக்க அரசு முழு உதவி செய்யும் எனவும் உறுதியளித்தார்.  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் ஜான் வர்கீஸ் கூறுகையில், ‘‘குழந்தையின் பாதிப்பு குறித்து தினகரன் நாளிதழ் வாயிலாக அறிந்து கொண்டேன். உடனடியாக இதை கவனத்தில் கொண்டு சிறுமியை சந்தித்து மருத்துவ சிகிச்சை மற்றும் செலவினை ஏற்றுக்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம்.

பள்ளியில் மாணவிக்கு ஏற்பட்ட நிலை குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார். குழந்தையின் மருத்துவ சிகிச்சைகள் முடிந்த பின் குழந்தை டானியாவின் குடும்பத்தினர் வசிக்க அரசு சார்பில் வீடு ஒதுக்கி தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை தாமாக முன்வந்து சிறுமிக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக அறிவித்துள்ளது. தற்போது சிறுமி அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு நாள் தொடர் ஆய்வுக்கு பின்னர் அறுவை சிகிச்சைக்கு தேதி முடிவு செய்யப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

Related Stories: