வியாபாரிகளுக்கு பிரச்னைகள் தொடர்கிறது: ஏ.எம்.விக்கிரமராஜா குற்றச்சாட்டு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார்.இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டார். பின்னர் அவர் பேட்டியளிக்கையில், ‘‘ வியாபாரிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை, காவல்துறையினருக்கு தெரிவிக்க ஒரு டோல் ப்ரீ நம்பரை அறிவித்தனர். அதன்பிறகும் பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது. ரவுடிகள், மாமூல் வாங்குகின்றவர்கள், பொருட்களை வாங்கி சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் செல்பவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: