3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர் பணியிடங்களில் 3 புதிய துணை வேந்தர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளார். இதற்கான உத்தரவுகள் நேற்று வழங்கப்பட்டன.

இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பு: காரைக்குடி  அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தராக ஜி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக என்.சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக டி.ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த 3 புதிய துணை வேந்தர்களின் நியமனத்துக்கான உத்தரவுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வழங்கினார். ஆணைகளை துணை வேந்தர்கள், ஆளுநர் மாளிகையில் நேரில் சென்று பெற்றுக் கொண்டனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணை வேந்தர்கள் அந்த பதவிகளில் 3 ஆண்டுகள் நீடிப்பார்கள்.

Related Stories: