டிஎஸ்பி ஆபீஸ் வாசலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஏட்டு

ஆத்தூர்: ஆத்தூர் டிஎஸ்பியின் ஜீப் டிரைவர் தனது பிறந்தநாளை, அலுவலக வாசலில் கேக் வெட்டி கொண்டாடினார். சேலம் மாவட்டம் ஆத்தூர் டிஎஸ்பியாக இருப்பவர் ராமச்சந்திரன். இவருக்கு ஜீப் டிரைவராக தலைமை காவலர் சந்திரன் பணியாற்றி வருகிறார். கடந்த 15ம்தேதி சந்திரன் தனது பிறந்தநாளை டிஎஸ்பி அலுவலக வளாக வாசலில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில், சந்திரன் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கியுள்ளார். அவருக்கு அனைவரும் கேக் ஊட்டியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பியின் தோழியும் கலந்துகொண்டு, சந்திரனுக்கு கேக் ஊட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் உள்ளது.

Related Stories: