×

வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘திருப்புத்தூர் நகரில் 6.52 ஏக்கர் நிலம் பள்ளிவாசல் மானியம் என்ற பெயரில் நிலபதிவேடுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 1.14 ஏக்கர் நிலம் திருப்புத்தூர் வர்த்தக சங்க செயலாளர் பெயரில் பட்டா மாற்றம் செய்து போலி ஆவணங்கள் மூலம் வழங்கியுள்ளனர். மோசடியில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். வர்த்தக சங்கத்தின் சார்பில், ‘‘சிவில் வழக்கில் வர்த்தக சங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Rs 10,000 fine on plaintiff: Court orders
× RELATED விழுப்புரம் அருகே தளவானூர்...