×

புதுச்சேரி பட்ஜெட் 22ம் தேதி தாக்கல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை செயலர் முனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 15வது சட்டப்பேரவையின் 3வது கூட்டத்தொடரில் 2வது பகுதியாக வரும் ஆகஸ்ட் 22ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுமென்றும், அன்றைய தினத்தில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை பேரவை முன் முன்னிலைப்படுத்துவார் என்றும், சட்டப்பேரவை தலைவர் அறிவித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. 22ம் தேதி பட்ஜெட் தாக்கலுக்குப்பின் அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதை இறுதி செய்யும்.

Tags : Puducherry , Puducherry budget official announcement on 22nd
× RELATED புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்..