விடுதி பெண் பராமரிப்பாளரிடம் சில்மிஷம் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அருகே விடுதி பெண் பராமரிப்பாளரிடம் சில்மிஷம் செய்ததாக கூறி, பள்ளி தலைமை ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கீக்களூர் கிராமத்தில் அரசு நிதியுதவி ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராக தினகரன்(54) உள்ளார். பள்ளியின் அருகே மாணவர்கள் தங்கும் விடுதியை, அதே பகுதியை சேர்ந்த 40 வயது பெண் பராமரித்து வருகிறார். 2 வாரத்திற்கு முன்பு தலைமை ஆசிரியர் தினகரன், விடுதி பராமரிப்பாளரிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது தெரிந்து அவரது மகன் ஜான்சன் அப்பகுதி மக்களுடன் நேற்று பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியர் தினகரனை தட்டிக்கேட்டார். பின்னர், பொதுமக்களுடன் சேர்ந்து தலைமை ஆசிரியர் தினகரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.  தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சென்று தலைமை ஆசிரியரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். ஜான்சன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: