ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் அதிரடி கைது

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பக்காளியூரைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது நிலம் கூட்டுப்பட்டாவாக இருக்கிறது. இதை தனிப்பட்டாவாக மாற்றித் தருமாறு சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். தனிப்பட்டாவாக அளவீடு செய்து கொடுக்க தாசில்தார் அலுவலகத்தில் அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் நிலத்தை அளவீடு செய்து கொடுக்க சங்ககிரி சர்வேயர் வைத்தீஸ்குமார் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இறுதியில் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் தான் நிலத்தை அளவீடு செய்து கொடுப்பேன் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேஷ், சேலம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து நேற்று தாலுகா அலுவலகத்தில் வைத்து ரூ.2 ஆயிரம் கொடுத்தபோது, அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயர் வைத்தீஸ்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories: