உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று எடப்பாடி சொந்த ஊரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

இடைப்பாடி: உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான இடைப்பாடியில், அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து  கொண்டாடினர். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தது செல்லாது என நேற்று, உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சேலம் மாவட்டம் இடைப்பாடி பேருந்து நிலையத்தில், ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அதிமுக மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடித்தும்,  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

அதேபோல், சேலம் மாவட்டம் ஓமலூரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், தொகுதி பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதேபோல் கருப்பூர், தாரமங்கலம், வெள்ளாளப்பட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான இடைப்பாடியில் எடப்பாடிக்கு எதிராக வந்த தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடியது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச்செய்தது.

Related Stories: