×

தேயிலை எஸ்டேட்களில் நீர்சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கும் சோலையார் அணை வெள்ளம்

வால்பாறை: வால்பாறையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை தென்மேற்கு பருவ மழை இடைவிடாது பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 1 வாரமாக மழை குறைந்து வெயில் நிலவி வருகிறது. இதனால் கூழாங்கல், கெஜமுடி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.சோலையார் அணைக்கு வினாடிக்கு 1554 கனஅடி நீர்வரத்து உள்ளது.

அணையில் இருந்து 793 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு சோலையார் மின்நிலையம் 1 இயக்கப்படுகிறது. 626 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு சோலையாறு மின்நிலையம் 2 இயக்கப்படுகிறது. 165 அடி நீர்மட்டம் உள்ள சோலையார் அணையில் 160 அடி நீர் உள்ளது. அணையில் 5412 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. சோலையார் அணை தொடர்ந்து 160 அடி நீர் மட்டம் உள்ள நிலையில், அணையின் கரையோர 12 கி.மீ. அளவிளான பல்வேறு தேயிலை எஸ்டேட்களில் நீர் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

Tags : Solayar Dam , The Cholaiyar Dam floods the tea estates and gives a beautiful view
× RELATED சோலையார் அணை நீர்மட்டம் சரிவு: பி.ஏ.பி. பாசன விவசாயிகள் கவலை