பாலக்காடு ரயில்வே மண்டல அலுவலகத்தில் பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் நீராவி இன்ஜின் ரயில்

பாலக்காடு: இந்தியன் ரயில்வேயின் பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் விதமாக நீராவி  இன்ஜின் பாலக்காடு ரயில்வே மண்டல அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. பாலக்காட்டில் கடந்த 1954ம் ஆண்டு ஸ்டீம் லோகோமோட்டீவ் வை.பி., 2204 மாடல் இன்ஜின் மற்றும் 9.65 டன் கல்கரியுடன் நீராவி ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஜெர்மன் நாட்டில் தயார் செய்யப்பட்ட இந்த இன்ஜின் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்க கூடியது. இந்த நீராவி இன்ஜின் ரயில் சவுத் சென்டரல் ரயில்வே மண்டலத்தில் சேவைக்கு பயன்படுத்தப்பட்டது.

கடந்த 2008ம்  ஆண்டு திருச்சிராப்பள்ளி கோல்டன் ஒர்க்‌ஷாப்பிலிருந்து பாலக்காடு ரயில்வே  அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ரயில் இன்ஜின் மீண்டும் புதுமைப்படுத்தி பாலக்காட்டில் பொதுமக்கள் முன்னிலையில் இயக்கப்பட்டது. இதை பாலக்காடு மண்டல ரயில்வே மேலாளர் திருலோக் கோத்தாரி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நீராவி ரயிலை பார்க்க ஏராளமான பொதுமக்கள் மண்டல அலுவலகத்திற்கு தினமும் வந்து கொண்டிருக்கின்றனர்.

Related Stories: