அரசு நிலத்தை பொதுமக்களுக்கு விற்று ரூ.11 கோடியை ‘ஆட்டை’ போட்ட அதிகாரி கைது; 4 ஆண்டுக்கு பின் அதிரடி

லக்னோ: அரசு நிலத்தை பொதுமக்களுக்கு விற்று ரூ. 11 கோடி அளவிற்கு மோசடி செய்த ரியல் எஸ்டேட்  நிறுவன அதிகாரியை 4 ஆண்டுக்கு பின் போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனில் குமார் துல்சியானி (58) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக பிளாட் மற்றும் வீட்டு மனைகளை விற்பதாக கூறி ெபாதுமக்களிடம் ரூ.11 கோடி மோசடி செய்தார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அனில் குமார் துல்சியானியை, மஹாநகர் பகுதியில் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் ஏ.டி.சி.பி. சையது அப்பாஸ் அலி கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட அனில் குமார் துல்சியானி, அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிலங்களை தனக்குச் சொந்தமானதாகக் காட்டி, பின்னர் அவற்றை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு முதல் குறைந்தது ரூ.11 கோடி அளவிற்கு மோசடி ெசய்து பத்திரப்பதிவுகளை செய்து கொடுத்துள்ளார். இவரால் ஏமாந்தவர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் கடந்த 4 ஆண்டாக தலைமறைவாக இருந்த அனில் குமார் துல்சியானி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.

Related Stories: