×

மாணவி ஸ்ரீமதி விவகாரம்..: கனியாமூர் தனியார் பள்ளி மீது அளிக்கப்பட புகார் மனுவை, வழக்காக மாற்றியது தேசிய மனித உரிமை ஆணையம்

சென்னை: மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் கனியாமூர் தனியார் பள்ளி மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்தார் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மாணவி  உயிரிழந்து 3 நாட்களாகியும் போலீசார் மௌனம் சாதித்து வந்தனர், இதனால்  ஏராளமான இளைஞர்கள் பொதுமக்கள் திரண்டு வந்து பள்ளியை தாக்கி அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இதை போலீசார் கலைக்கிய முயன்றதில் அது கலவரமாக வெடித்தது, 50-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 300-க்கும் அதிகமானவர்கள் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பள்ளி மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் தற்போது, தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் கட்டடங்களில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிய புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் தற்போது வழக்காக பதிவு செய்துள்ளது.


Tags : National Human Rights Commission ,Kaniyamoor Private School , Student Smt..: The National Human Rights Commission converted the complaint filed against Kaniyamoor Private School into a case.
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...