×

சோமாஸ்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, சர்க்கரை கலந்து மிக்ஸியில் கரகரவென்று அரைத்துக்கொள்ளவும். இதனுடன் ஏலப்பொடி சேர்த்து கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, ரவை, உப்பு, நெய், பேக்கிங் பவுடர், தண்ணீர் சேர்த்து பூரி மாவுபோல் பிசைந்துகொள்ளவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு தேங்காயை வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு தேங்காயை சிவக்க வறுத்து பொட்டுக்கடலை கலவையுடன் கலக்கவும். ஒரு சிறு கிண்ணத்தில் மைதா, சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்போல் கலந்து வைக்கவும். மாவிலிருந்து சிறு பகுதி எடுத்து உருட்டி மெல்லியதாகத் திரட்டி உள்ளே பூரணம் வைத்து மூடி மைதா பேஸ்ட்டால் ஓரங்களை ஒட்டி சீல் செய்து எண்ணெயில போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

Tags : Somas ,
× RELATED ஸ்வீட் சோமாஸ்