×

தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரி வழக்கில் வனபாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரி மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச், தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து சிலர் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு, இந்த வழக்குகள் அனைத்தையும் 2-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டது.

ஆக்கப்பூர்வமான பணி இந்தநிலையில் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், என்.மாலா ஆகியோர் கொண்ட முழு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. சீமை கருவேலம் உள்ளிட்ட அன்னிய மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை பிறப்பித்துள்ளது என்றும் கூறி அந்த அரசாணையை அரசு தரப்பு வக்கீல் தாக்கல் செய்தார் பின்னர், சீமை கருவேல மரங்களை எந்திரம் மூலமும், ரசாயன முறையிலும் அகற்றக்கூடிய பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.

இந்த பணி காகித வடிவில் மட்டுமல்லாமல் ஆக்கப்பூர்வமான பணியாக செயல்படுத்தி வருவதாகவும் அதனால் இந்த வழக்குகளை முடித்துவைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள் மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்ல முடியாது. அன்னிய மரங்களை அகற்றும் பணிகளில் தனியாரை ஏன் ஈடுபடுத்தக் கூடாது? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

மேலும், ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு, அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளை விசாரித்து வருவதால், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தை இரு நீதிபதிகள் அமர்வு கண்காணிக்கலாம் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் கேட்டுக் கொண்டார்.

Tags : Madras High Court ,Tamil Nadu , Madras High Court orders change of two-judge bench to hear cases related to forest protection in the case of removal of semai oak trees across Tamil Nadu.
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு