2ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆக. 22ல் தொடங்கும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: 2ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 22ல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 21ல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும், செமஸ்டர் தேர்வுக்கு பின் மீண்டும் 2023 ஜனவரி 23ல் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்தது.

பொறியியல், பி.டெக்., பி.ஆர்க். முழு நேரப் படிப்புகளுக்கும் பொறியியல், பி.டெக்., பகுதிநேரப் படிப்புகளுக்கும் 3-வது செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்குகின்றன.

இதேபோல் எம்பிஏ முழு நேர, பகுதிநேரப் படிப்புகளுக்கும் ஒருங்கிணைந்த எம்பிஏ படிப்புக்கும் அதே நாளில் 2-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்கவுள்ளது. இந்த மாணவர்களுக்கு டிசம்பர் 8-ம் தேதி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இந்த மாணவர்கள் அனைவருக்கும் டிசம்பர் 21 முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது. செமஸ்டர் தேர்வுக்குப் பின் விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என அண்ணாபல்கலை கழகம் தெரிவித்துள்ளது. மேலும் சனிக்கிழமைகளில் கல்லூரிகள் செயல்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Related Stories: