×

3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: 3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5 சதவீதம் மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் வேகமாக அதிகரித்து வந்ததால் சமீபத்தில் ரிசர்வ் வங்கி 2 முறை வட்டி விகிதங்களை அதிகரித்தது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வாண்டு வட்டிக்கு மானியம் அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பொதுவாக ஒரு மானியத்தை அளிக்க முடிவு செய்யும் போது அதற்கான ஒதுக்கீட்டையும் அரசு முடிவு செய்கிறது.

அந்த வகையில், விவசாயிகளுக்கான வட்டி மானியத்துக்காக ரூ.34,856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மீனவர்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் ஆகியோருக்கும் இந்த மானியம் கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பணம் கிடைக்கும். இதேபோல், அனைத்து வகையான மானியங்களும் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

Tags : Union Cabinet , Short term agricultural credit, 1.5% subsidy, united cabinet
× RELATED தீபாவளி போனஸ் அறிவிப்பு: ஒன்றிய அமைச்சரவையில் ஆலோசனை