முதுமலை எல்லை சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்: வனத்துறையினர் நடவடிக்கை

கூடலூர்: சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை சுதந்திர தினம் என வந்த தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வந்து சென்றனர். இதேபோல் முதுமலை வழியாக கேரளா கர்நாடகாவில் இருந்தும் ஊட்டியிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ஏராளமாக வந்து சென்றன.

 முன்னதாக சுற்றுலா பயணிகள் மூலமாக முதுமலை வனப்பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவு பொருட்கள் வீசுவதை தடை செய்யும் வகையில் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளான தொரப்பள்ளி உள்ளிட்ட சோதனை சாவடிகளில் வனத்துறை பணியாளர்கள் வாகனங்களை சோதனை செய்து தண்ணீர் பாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் வாகனங்களில் செல்வோர் தங்களிடம் உள்ள வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

Related Stories: