சேலம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாயை பின்தொடர்ந்து வந்த ஒன்றரை வயது குழந்தை தனியார் பள்ளி வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரகனூரில் வசித்து வரும் தம்பதியினர் காசி - சுதா, இவர்களுக்கு வேதஸ்ரீ, பவானிஸ்ரீ என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மூட்டை தூக்கும் தொழிலாளியான காசி சென்ற நிலையில் தாய் சுதா தனது 4 வயது மூத்த மகள் வேதஸ்ரீயை வீரகனூரில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு பேருந்தில் ஏற்றி அனுப்பிவிடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது தனது இளைய மகளான பவானிஸ்ரீ தயாயை பின்தொடர்ந்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பள்ளிவாகனத்தின் முன்சக்கரங்கள் ஒன்றரை வயது குழந்தை(பவானிஸ்ரீ) மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து வீரகனூர் போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: