முதல் ஒருநாள் போட்டி; ஹராரே மைதானத்தில் நாளை இந்தியா-ஜிம்பாப்வே மோதல்

ஹராரே:  கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி  ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள்கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இதில் முதல்போட்டி நாளை நடக்கிறது. ரோகித்சர்மா,விராட்கோஹ்லி, ரிஷப்பன்ட் ஹர்திக்பாண்டியா, ஜடேஜா உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம்வீரர்களை கொண்டஇந்திய அணி களம் காண்கிறது. கே.எல்.ராகுலுடன் தவான் தொடக்கவீரராக களம்இறங்குவார். சுப்மான்கில் 3வது இடத்தில் ஆடவாய்ப்பு உள்ளது. விக்கெட் கீப்பர் போட்டியில் சஞ்சு சாம்சன், இஷான்கிஷன் உள்ளனர்.

தீபக் ஹூடா, ராகுல்திரிபாதிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். பவுலிங்கில்  முகமதுசிராஜ்,தீபக் சாகர், அவேஷ்கான் அல்லது பிரசித்கிருஷ்ணா, சுழலில் அக்சர்பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் இடம்பிடிப்பர். மறுபுறம் தொடர் தோல்விகளை சந்தித்துவந்த ஜிம்பாப்வே கடைசியாக வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ளது. ரெஜிஸ் சகப்வா தலைமையிலான அந்த அணியில்  ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ரசா சூப்பர் பார்மில் உள்ளார். ரியான் பர்ல், காயா, கிளைவ் மடாண்டே பேட்டிங்கில் வலு சேர்க்கலாம். ரிச்சர்ட் ங்கரவா, லூக் ஜாங்வே,தனகா சிவாங்கா ஆகியோரை தான் பவுலிங்கில் பெரிதும் நம்பி உள்ளது.

இந்திய நேரப்படி பிற்பகல் 12.45மணிக்கு தொடங்கி நடைபெறும்இந்தபோட்டி சோனி சிக்ஸ், சோனி டென் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.6 ஆண்டுக்கு பின் ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்திய உத்தேச அணி:  கேஎல் ராகுல் (கே),ஷிகர் தவான்,ராகுல் திரிபாதி,சுப்மன் கில் சஞ்சு சாம்சன் / இஷான் கிஷன் (வி.கீ) தீபக் ஹூடா, அக்சர் படேல்,தீபக் சாஹர்,குல்தீப் யாதவ்,பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

Related Stories: