எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தியது போலவே நாங்கள் பொதுக்குழுவை நடத்தியுள்ளோம்: கே.பி.முனுசாமி பேட்டி

சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தியது போலவே நாங்கள் பொதுக்குழுவை நடத்தியுள்ளோம் என  கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஜூலை 11ம் தேதி ஈபிஎஸ் நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய கே.பி.முனுசாமி; எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தியது போலவே நாங்கள் பொதுக்குழுவை நடத்தியுள்ளோம். பொதுக்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்கள் ஜூன் 23-ல் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை ஒருமனதாக நிராகரித்துள்ளனர்.

ஜூலை 11ல் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர்கள் 2,512 பேர் பழனிசாமியை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டுள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு இல்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை. தீர்ப்பு விவரம் முழுவதும் கிடைத்ததும் அதிமுக நிர்வாகிகள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்,

Related Stories: