பயன்பாடு இல்லாத அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள்

கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே பயன்பாடு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் மருதன்கோன் விடுதி மற்றும் பந்துவக்கோட்டை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த 2 ஊராட்சிகளிலும் மொத்தம் 4000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் 1974ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இருந்த போது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மருதன் கோன் விடுதி ஊராட்சியில் அரசு தொடக்க பள்ளி தொடங்கப்பட்டது. அதன் அருகே பந்துவகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் உள்ளன. முதலில் மருதன் கோன் விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்த போது பந்துவகோட்டை ஊராட்சியை சேர்ந்த மாணவ, மாணவிகளும் கல்வி பயின்று வந்தனர். அதன் பிறகு அந்த பள்ளி கட்டிடம் அருகே பந்துவகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகள் தொடங்கப்பட்டு இயங்கி வந்தன.

அதன் பிறகு தனி தனியே பள்ளிகள் இயங்கி வந்த போதிலும் நாளடைவில் பந்துவகோட்டை அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து உயர்நிலைப்பள்ளிகளாக மாறியது. இதன் காரணமாக மருதன்கோன் விடுதி ஊராட்சியில் இயங்கி வந்த அப்பள்ளி கட்டிடம் நாளடைவில் பழுடைந்து மிக உயரமான கட்டிடமாக காட்சி அளித்து 2 பக்கமும் கதவுகள் பெயர்ந்து தற்பொழுது எந்த நேரத்திலும் இடிந்து ஆபத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ளது. குறிப்பாக பந்துவகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் அந்த வழியாக தான் சென்று வருவது வழக்கம். எனவே பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மருதன்கோன் விடுதி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான பழுடைந்து கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை முழுவதுமாக அப்புறடுத்தி மாணவ, மாணவிகளின் நலன் காக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: