பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கும் போது தமிழ்நாட்டின் கோரிக்கைகள் முன்வைக்கப்படும்: டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

டெல்லி: பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கும் போது தமிழ்நாட்டின் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9.14 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் முதல்வரின் தனி செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களும் சென்றனர். நேற்று இரவு முதல்வர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இதையடுத்து, டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகிய இருவரும் பதவியேற்ற பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருப்பது இதுவே முதன்முறையாகும். இதையடுத்து முதல்வர் மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.  தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்து குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் விசாரித்தனர்.

இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தது தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமரை சந்திக்கவுள்ளேன். பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கும் போது தமிழ்நாட்டின் கோரிக்கைகள் முன்வைக்கப்படும். பிரதமரை சந்திக்கும் போது நீட், புதிய கல்வி கொள்கை, காவிரி பிரச்சனை, மேகதாது உள்ளிட்டவை குறித்து கோரிக்கை வைக்க உள்ளேன் இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: