தேயிலை தோட்டங்களை சூழ்ந்த சோலையார் அணை வெள்ளம்

வால்பாறை: வால்பாறையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை தென்மேற்கு மழை இடைவிடாது பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 1 வாரமாக மழை குறைந்து வெயில் நிலவி வருகிறது.  இதனால் கூழாங்கல்,  கெஜமுடி உள்ளிட்ட ஆறுகளில் நீர் வரத்து குறைந்து உள்ளது. சோலையார்  அணைக்கு வினாடிக்கு 1554 கன அடி நீர் வரத்து உள்ளது.

அணையில் இருந்து 793 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு சோலையார் மின்நிலையம் 1 இயக்கப்படுகிறது. 626 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு சோலையாறு மின்நிலையம் 2 இயக்கப்படுகிறது. 165 அடி நீர் மட்டம் உள்ள சோலையார் அணையில் 160 அடி நீர் உள்ளது. அணையில் 5412 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. சோலையார் அணை தொடர்ந்து 160 அடி நீர் மட்டம் உள்ள நிலையில், அணையின் கரையோர 12 கி.மீ. அளவிளான பல்வேறு தேயிலை எஸ்டேட்களில் நீர் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

Related Stories: