உணவுக்குழாயில் சிக்கிய பீட்ரூட் சிகிச்சையால் உயிர் தப்பிய பசுமாடு

பல்லடம்:  பல்லடம் பனப்பாளையத்தில் பசு மாட்டின் உணவு குழாயில் அடைந்திருந்த பீட்ரூட்டை கால்நடை மருத்துவர் அகற்றி, மாட்டை காப்பாற்றினார்.பல்லடம் பனப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சங்கர். இவரது தோட்டத்தில், பசுமாடு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்தது. இது குறித்து கணபதிபாளையம் கால்நடை உதவி மருத்துவர் அறிவுச்செல்வனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பசுமாட்டை மருத்துவர் அறிவுச்செல்வன் பரிசோதித்தபோது மாட்டின் உணவு குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதும், பீட்ரூட் உணவு குழாயில் அடைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பீட்ரூட்டை மருத்துவர் அகற்றியதால் பசுமாடு உயிர் பிழைத்தது. இது குறித்து கால்நடை உதவி மருத்துவர் அறிவுச்செல்வன் கூறுகையில், பீட்ரூட், முட்டைகோஸ் போன்றவற்றை உள்ளிட்ட முழுமையாக கால்நடைகளுக்கு உணவாக வழங்குவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடும் கால்நடைகளின் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு கால்நடைகளின் உயிருக்கே ஆபத்து நிகழும் என்றார்.

Related Stories: