முத்துப்பேட்டை அடுத்த குன்னலூரில் மாரியாற்றில் படர்ந்த ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் உள்ள மாரியாற்றில் படர்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் உள்ள மாரியாறு என்பது பாண்டி கோட்டகம் ராஜன் வாய்க்காலிருந்து பிரிந்து இப்பகுதி வடிகாலாக மாரியாறு உருவாகியது. இங்கிருந்து தண்ணீர் கரையாங்காடு வழியாக தொண்டியக்காடு சென்று கடலில் கலக்கிறது. இந்த மாரியாறு, குன்னலூர், எக்கல், தர்காசு போன்ற சுற்று பகுதி கிராமங்களுக்கு வடிகாலாக உள்ளது. இதனால் கடும் மழை மற்றும் ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு நேரத்தில் இந்த மாரியாறு வடிகால் இப்பகுதி கிராமங்களுக்கு பயனாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாரியாற்றை தூர்வாராததால் தற்போது ஆறு நெடுவேங்கும் தூர்ந்து ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து உள்ளது. தற்போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் உள்ளது.

ஆனால் வடிய முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் கடும் மழை மற்றும் வெள்ளம் போன்ற காலங்களில் தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் உள்ளது. அதேபோல் சாகுபடி வயலும் மூழ்கி பயிர்கள் சேதமாகவும் வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாரியாறு வடிகால் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுவதுடன் வரும் ஆண்டில் தூர்வாரியும் தரவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதி விவசாயியும் வட்டார காங்கிரஸ் தலைவருமான வடுகநாதன் கூறுகையில்:குன்னலூர் கிராமத்தில் 5 ஊர் விவசாயிகளுக்கு வடிகாலாக பயன்படும் மாரியாறு மூன்று ஆண்டுகளாக தூர்வாரபடாமலும் பாசி அரிக்கப்படாமலும் இருக்கின்றது. ஆகையால் விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக தற்போது படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி சரி செய்து தரவேண்டும். வருங்காலத்தில் இந்த ஆற்றை தூர்வாரி வேண்டும் என்றார்.

Related Stories: