வீட்டின் கதவை உடைத்து அரிசி சாப்பிட்ட யானை

கூடலூர்:  கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மூல வயல் 3வது டிவிசன் பகுதியில் வசிப்பவர் அப்துல் கபூர்(47). இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டை பூட்டிவிட்டு தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் இப்பகுதிக்கு வந்த காட்டுயானை வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே இருந்த சிலின்டர் உள்ளிட்ட பொருட்களை இழுத்து வீசியதோடு அரிசி உள்ளிட்ட தானியங்களையும் சாப்பிட்டது.

பின்னர் அங்கிருந்து சென்றுள்ளது. யானை வந்து சென்றதை பார்த்த அக்கம்பக்கத்தவர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பார்வையிட்டு சென்றனர்.

Related Stories: