வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் வெண்கலை சிலை; கிராம சபையில் தீர்மானம்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி ஊராட்சியில் 76வது சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள பணிகள் குறித்தும் அண்ணா கிராம வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகள் மற்றும் செய்யப்பட உள்ள பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. மேலும், கிராமங்கள் உள்ள நிறை குறைகளை பொதுமக்களிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் கேட்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் வெண்கல சிலை ஊராட்சியில் வைக்கவும், இதன் முழு செலவை ஊராட்சி மன்ற தலைவரே ஏற்றுக் கொள்வதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இது கிராம மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

முன்னதாக, ஊராட்சி மன்ற அலுவலகம், தாழையம்பட்டு ஆதிதிராவிட நல்ல பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதனை தொடர்ந்து, ஊராட்சியில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏகவள்ளி அன்னப்பன் உட்பட ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: