மீன்வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள்; வௌியீடு கலெக்டர் தகவல்

திருவள்ளுர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவள்ளுர் மாவட்டம், மீன்வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டு மற்றும் கடல்வளம் மீன்வள உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தோடும் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் பின்வருமாறு: கொல்லைப்புற அலங்கார மீன் வளர்த்தெடுக்கும் அலகு அமைத்திட ஆகும் செலவினதொகை ரூ.3 லட்சத்தில் பொதுபயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.1.20 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.1.80 லட்சம் மானியமாக வழங்கப்படும். நடுத்தரம் அளவிலான அலங்காரமீன் வளர்த்தெடுக்கும் அலகு அமைத்திட ஆகும் செலவினதொகை ரூ.8 லட்சத்தில் பொதுபயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.3.20 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.4.80 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த அலங்காரமீன் வளர்த்தெடுக்கும் அலகு அமைத்திட ஆகும் செலவின தொகை ரூ.25 லட்சத்தில் பொதுபயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.10 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.15 லட்சம் மானியமாக வழங்கப்படும். குளிரூட்டப்பட்ட வாகனம் வாங்க ஆகும் செலவின தொகை ரூ.20 லட்சத்தில் பொதுபயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.8 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.12 லட்சம் மானியமாக வழங்கப்படும். உறைப்பதன சேமிப்பு அறை அமைத்திட ஆகும் செலவினதொகை ரூ.80 லட்சத்தில் பொதுபயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.32 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.48 லட்சம் மானியமாக வழங்கப்படும். புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் செலவினதொகை ரூ.7 லட்சத்தில் பொதுபயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.2.40 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.4.20 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் செலவின தொகை ரூ.7 லட்சத்தில் பொதுபயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.2.40 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.4.20 லட்சம் மானியமாக வழங்கப்படும். மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் ஆகும் செலவினதொகை ரூ.4 லட்சத்தில் பொதுபயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.1.60 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் மகளீர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.2.40 லட்சம் மானியமாக வழங்கப்படும். சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்திட ஆகும் செலவினத்தொகை ரூ.7.50 லட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.3 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.4.50 லட்சம் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் திருவள்ளுர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், பொன்னேரி எண்.5, சங்கர் நகர், பாலாஜி தெரு, வெண்பாக்கம், பொன்னேரி மற்றும் தொலைபேசி எண்.044-27972457 அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: