சந்திரவிலாசபுரம் ஊராட்சியில் பூங்கா, சோடியம் விளக்குகள் கிராம சபையில் நன்றி தெரிவித்து தீர்மானம்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை  ஒன்றியம் சந்திரவிலாசபுரம் ஊராட்சியில்  சுந்திரதின விழாவை யொட்டி கிராமசபை கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் வி.ஜி.மோகன் தலைமை வகித்தார். கிராம பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்ற கிராமசபை கூட்டத்தில்  வட்டார வளர்ச்சி அலுவலர் செ.செ.சேகர் பங்கேற்றார்.  

அப்போது கிராம மக்களின் நீண்ட காலமாக சாலை வசதியின்றி அவதிப்பட்டு வந்த நிலையில்  ஆர்.கே.பேட்டை முதல் சந்திரவிலாசபுரம் வரை 3.50 கி.மீ  தூரத்திற்கு பிரதம மந்திரியின் கிராம சுவராஜ் திட்டத்தின் கீழ் ரூ.2.25 கோடி தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், கிராமத்தை பசுமையாக மாற்றும் வகையில் பூங்கா, ஊராட்சியில் சோடியம் விளக்குகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய உறுதியளித்த அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், திருத்தணி  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆகியோருக்கும்,  ஊராட்சி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய  பரிந்துரை செய்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.பூபதிக்கும் கிராம சபையில் நன்றி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: