மீன்பிடி மற்றும் மீனவர் நலன் பல்நோக்கு பண்ணை, குட்டைக்கு ஒப்புதல்; கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர்: மீன்பிடி மற்றும் மீனவர் நலன் பல்நோக்கு பண்ணை குட்டைக்கு ஒப்புதல் அளிக் கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பு: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரால் 2022-2023ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையில் பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து திருவள்ளுர் மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டு மீன்வள உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தோடும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் 250 முதல் 1000 ச.மீ அளவிலுள்ள பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன்குஞ்சுகள், மீன்தீவனம், உரங்கள் ஆகிய மீன்வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்கள், பண்ணை பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான ஒரு அலகிற்கு ஆகும் செலவினமான ரூ.36, ஆயிரத்தில் 50 சதவீத மானியத்தில் பல்நோக்கு பண்ணை குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண். 5, சங்கர் நகர், பாலாஜி தெரு, வெண்பாக்கம், பொன்னேரி மற்றும் தொலைபேசி எண்.044-27972457 அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: