இறந்தவர்களை தகனம் செய்வதிலும் பிரச்னையா?.. தகனமேடைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை: நீர்நிலையில் தகன மேடை அமைப்பதாக தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லைச் சேர்ந்த பால்பாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கீழத்திருத்தங்கல் கிராமத்தில் சுமார் 2 ஹெக்டேரில் கண்மாய் உள்ளது. இப்பகுதியின் விவசாயம் மற்றும்  நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. நீர்நிலைப்பகுதியில், உள்ளாட்சி சார்பில் தகன மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர், ‘‘இறந்தவர்களை தகனம் செய்வதில் கூட பிரச்னையா?’’ எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், ‘‘தகன மேடை அமைப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதற்கு முன்னதாகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல’’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: