×

ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளராக இருப்பவர் மல்லிகா(48). கண்ணுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு தலைவி ராஜலெட்சுமி, குழுவில் உள்ள 12 பேருக்கு நிதி உதவி கேட்டு தாட்கோ மூலம் விண்ணப்பித்துள்ளார். ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்க  மேலாளர் மல்லிகா, ரூ.12 ஆயிரம் லஞ்சம் தரும்படி ராஜலெட்சுமியிடம் கேட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் தடவிய ரூ.12ஆயிரத்தை ராஜலெட்சுமியிடம் கொடுத்தனுப்பினர். அதை அவர், நேற்று மதியம் ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார அலுவலகத்தில், மேலாளர் மல்லிகாவிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர்.


Tags : Bribery, woman officer arrested
× RELATED களியக்காவிளை அருகே தனியார் பள்ளியில்...