அதிமுக ஆட்சியில் ஜல் ஜீவன் திட்ட ஒப்பந்த முறைகேடு புதுக்கோட்டை கலெக்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: அறிக்கையளிக்க உத்தரவு

மதுரை: அதிமுக ஆட்சியின்போது, ஜல் ஜீவன் திட்ட ஒப்பந்த முறைகேட்டில், புதுக்கோட்டை கலெக்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் முத்துசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2020ல் (அதிமுக ஆட்சியில்) ரூ.96.60 லட்சம் மதிப்பில் ஜல் ஜீவன் திட்ட ஒப்பந்தம் எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதற்காக எங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.64.40 லட்சத்தை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘ஜல் ஜீவன் மிஷன் திட்ட ஒப்பந்தம் வெளிப்படையாக வழங்கப்படவில்லை.இதில் விதிமீறல் நடந்துள்ளது. இதற்காக முன்னாள் திட்ட இயக்குநர் காளிதாசன், செயற்பொறியாளர் ஜோஸ்பின் நிர்மலா, உதவி செயற்பொறியாளர் முகமது நிஜாமுதீன், உதவி திட்ட அலுவலர் தமிழ்ச்செல்வி, கண்காணிப்பாளர் மாணிக்கவாசகம், உதவியாளர் ராஜா கண்ணன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த பணிகள் வெளிப்படையாக நடக்கவில்லை. இதற்காக அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கையளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: