ஜிஎஸ்டி வரி மோசடி 32 வணிகர்களிடம் இருந்து ரூ.1.48 கோடி வசூல்

சென்னை: சென்னையில் வணிக வரித்துறை நடத்திய சோதனையில் 32 வணிகர்கள் வரி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களிடம் இருந்து ரூ.1.48 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து வணிக வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 13, 14ம் தேதி சென்னை வணிக வரி நுண்ணறிவுப் பிரிவினரால் 32 வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது வரி ஏய்ப்பு செய்தமைக்காகவும், உள்ளீட்டு வரி தவறாக பயன்படுத்தியமைக்காகவும், 32 வணிகர்களிடம் இருந்து 4 இரும்பு, 5 மின்சாதனம், 6 தங்க நகை மற்றும் இதர வணிகர்கள் 32 பேரிடம் இருந்து ரூ.1.48 கோடி வரி அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும், 5 போலி வணிகர்கள் அடையாளம் காணப்பட்டதின் பேரில், நோட்டீஸ் வழங்கப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுகளை தொடர்ந்து மேலும் சில வணிகர்களின் கணக்குகளை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: