காங்., எம்பி ஜெயக்குமார் உருவத்தை கேலி செய்து சமூக வலைதளத்தில் பதிவு: கட்சி நிர்வாகிகள் டிஜிபியிடம் புகார்

சென்னை: காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் உருவத்தை கேலி செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபியிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் செய்தனர். திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவருமான ஜெயக்குமாரின் உருவத்தை கேலி செய்யும் வகையில் சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவு செய்துள்ளது. இது காங்கிரசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் சார்பில் நேற்று டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

Related Stories: