சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.67 லட்சம் நிதி: அமைச்சர்கள் வழங்கினர்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் 285 மாணவர்களுக்கு ரூ.67.39 லட்சம் கல்வி ஊக்கத் தொகையை அமைச்சர்கள் வழங்கினர். சென்னை பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் மாநகராட்சி நிதியிலிருந்து கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2021-22 கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் பயின்று தற்சமயம் மருத்துவம் பயிலும் 2 பேருக்கு தலா ரூ.45,000 வீதம் ரூ.90,000ம், பொறியியல் பயிலும் 120 பேருக்கு தலா ரூ.45,000 வீதம் ரூ.54 லட்சமும், பட்டப்படிப்பு பயிலும் 129 பேருக்கு தலா ரூ.7000 வீதம் ரூ.9.03 லட்சமும், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பயிற்சி பயிலும் 4 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.40,000ம், டிப்ளமோ பயிலும் 23 பேருக்கு தலா ரூ.7000 வீதம் ரூ.1.61 லட்சமும், சட்டம் பயிலும் 2 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.20,000ம்,  ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு பயிலும் 5 பேருக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.1.25 லட்சம் என 285 பேருக்கு ரூ.67.39 லட்சம் மதிப்பீட்டில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.

விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை வழங்கினர். விழாவில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: