அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அமெரிக்க பல்கலையுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துடன் அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் ஸ்டில்வாட்டரில் உள்ள ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டியுடன் 15-11-2017 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி இயக்குநரகத்தின் அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலம் 2022ம் ஆண்டு முடிவுற இருப்பதால், மேலும் 5 ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டியை சேர்ந்த டாக்டர் கார்லோஸ் ரிஸ்கோ, முதல்வர், கால்நடை மருத்துவ கல்லூரி, ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டி, டாக்டர் ஜெர்ரி ஆர்.மலாயர், துணை முதல்வர், கால்நடை மருத்துவ கல்லூரி, ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டி, டாக்டர் ஆஷிஷ் ரன்ஜன், இயக்குநர் மற்றும் டாக்டர் லையோனல் டாசன், பேராசிரியர் அடங்கிய குழு இந்தியாவிற்கு வருகை புரிந்தனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் செல்வக்குமாரும் ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டி, கால்நடை மருத்துவ கல்லூரியை சேர்ந்த முதல்வர் டாக்டர் கார்லோஸ் ரிஸ்கோவும் நேற்று (16ம் தேதி) அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: